/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் விவசாயிகள் துண்டு ஏந்தி போராட்டம்
/
தஞ்சையில் விவசாயிகள் துண்டு ஏந்தி போராட்டம்
ADDED : ஆக 25, 2025 11:55 PM

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நீதிமன்றம் முன், துண்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை, 16,000 விவசாயிகளுக்கு, 212 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டும்.
நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 2022 நவ., 30 முதல் 1,000 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை, மக்கள் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதனால், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் நீதிமன்றம் முன், வாயில் துணியை கட்டிக்கொண்டு, கையில் துண்டு ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்திய விவசாயிகளை, போலீசார் கைது செய்ய முயன்றனர்.
இதில், இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், விவசாயிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, பக்தபுரி ரவுண்டானாவில், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் காசிநாதன் தலைமையில், கரும்பு ஆலையில் பல கோடிரூபாய் முறைகேடு குறித்து மத்திய அரசு, சி.பி.ஐ., மூலம் விசாரிக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.