/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே பயனீட்டாளர் ஆலோசனை கூட்டம்
/
ரயில்வே பயனீட்டாளர் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 23, 2025 08:14 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், 29வது ரயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், முதுநிலை வணிக மேலாளர் வாசுதேவன் வரவேற்றார். கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தில், மேற்கொண்டு வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகள், உள் கட்டமைப்பு திட்டங்கள், புதிய ரயில் சேவை, சிறப்பு ரயில்கள், கூடுதல் நிறுத்தங்கள், பயணிகளின் வச-திக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்-டவை குறித்து விளக்கப்பட்டது.
இதில், ரயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இவற்றின் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளர் பன்-னாலால் உறுதியளித்தார்.

