/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி பா.ஜ.,தான்'
/
'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி பா.ஜ.,தான்'
'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி பா.ஜ.,தான்'
'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி பா.ஜ.,தான்'
ADDED : டிச 23, 2025 08:14 AM

சேலம்: ''சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை, தமிழகத்தின் கொண்டாட தகு-தியுள்ள ஒரே கட்சி பா.ஜ.,தான்,'' என, சேலத்தில் நடந்த சமத்-துவ கிறிஸ்துமஸ் விழாவில், வேலுார் இப்ராகிம் பேசினார்.
சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சிறுபான்மை பிரிவு மற்றும் அஸ்-தம்பட்டி மண்டலம் சார்பில், மணக்காடு அரசு போக்குவரத்து கழகம் எதிரே சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் தி.மு.க., சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் போட்டி போட்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்று, தாங்கள் தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு எனவும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு பாதிப்பு என பயமுறுத்தி வருகின்றனர்.
பல கட்சிகள் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாக்கள் நடத்தப்-படுகிறது. ஆனால், தமிழகத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தகுதி உள்ள ஒரே கட்சி பா.ஜ., தான். முத்ரா கடன், பிரதமர் வீடு கட்டும் திட்டம் என மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
பின்னர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகியோருடன் வேலுார் இப்ராகிம் ஒன்றாக இணைந்து, கேக் வெட்டி கிறிஸ்-துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடினார்.
ஏற்பாடுகளை சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் அப்துல் சமது, அஸ்தம்பட்டி மண்டல தலைவர் சந்தோஷ்குமார் உள்-ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

