ADDED : டிச 19, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம், செவ்வந்திப்பட்டி, காளிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மல்லிகை பூக்கள் பயிரிட்டுள்ளனர். பூக்கள் பறிக்கப்பீட்டு நாமக்கல், கரூர், ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு தினமும் அனுப்பி வருகின்றனர்.
இன்று மார்கழி மாத அமாவாசையையொட்டி, பூக்கள் தேவை அதிகம் இருக்கும் என்பதால், நேற்று எருமப்பட்டி பகுதியில் குண்டுமல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ, 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

