/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு
/
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைமையிலான கருத்தரங்கு
ADDED : டிச 19, 2025 06:24 AM
நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில், மாணவர் தலைமையிலான கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், மேல்நிலைப்பள்ளி முதல்வர் விக்டர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவுகள், கற்றல் இலக்குகள், வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பெற்றோரிடம் விளக்கினர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உரையாடி, அவர்களின் தன்னம்பிக்கை, பேசும் திறன் ஆகியவற்றை பாராட்டினர்.ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கிடையே நல்ல தொடர்பு ஏற்பட உதவினர். இந்நிகழ்ச்சி, பள்ளி மற்றும் பெற்றோர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக அமைந்தது.
இக்கருத்தரங்கு, மாணவர்கள் தங்கள் கற்றலைத் தாங்களே எடுத்துக் கொண்டு, தங்கள் கல்வி முன்னேற்றத்தை பெற்றோரிடம், நம்பிக்கையுடன் விளக்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.