/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்
/
பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்
பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்
பள்ளத்தில் பாய்ந்த கார்: ஓட்டுனர் உள்பட ஐவர் காயம்
ADDED : டிச 19, 2025 06:22 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த காரில் பயணம் செய்த ஓட்டுனர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 40, ஈஸ்வரன், 52, வளர்மதி, 40, வள்ளியம்மாள், 45, சுரேஷ், 44, ஆகியோர் மாருதி ஆல்டோ காரில், திருவண்ணாமலை சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமாரபாளையம் பல்லக்காபாளையம் தனியார் கல்லுாரி அருகே வந்த போது, ஓட்டுனர் சுரேஷ், கட்டுப்பாட்டை மீறி, அங்கிருந்த பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.