/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா கொண்டாட்டம்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : டிச 19, 2025 06:22 AM

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா மற்றும் எக்ஸ்டஸி 25வது ஆண்டு விழா, ஸ்ரீ ரங்கசாமி கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக, எக்ஸல் மெடிக்கல் கேம்பஸ் எக்ஸல் ஹோமியோபதி கல்லுாரி, சித்தா கல்லுாரி இயற்கை மற்றும் யோகா கல்லுாரி, மருந்தியில் கல்லுாரி, பிசியோதெரபி கல்லுாரி, ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரிகளின், ஆண்டு விழாவானது எக்ஸல் எக்ஸ்டஸி 25 என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.
நிறுவன அறங்காவலர் பார்வதி, எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி மதன்கார்த்திக் ஆகியோர் நிறுவனர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து குத்துவிளக்கேற்றினர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மதன்கார்த்திக் வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவர்களுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் நடேசன் விருதுகளை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து எக்ஸ்டஸி 25 விழாவை சிறப்பிக்கும் வகையில், திரைப்பட நடிகர் மிர்ச்சி சிவா, நடிகை அப்பர்ணா பாலமுரளி, விஜய் டிவி பாடகர்கள் அரவிந்த் காரணீஸ்வரன் மற்றும் தன்யஸ், ஆகியோர் விழாவை சிறப்பு செய்தனர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நன்றி கூறினார்.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர், ஏற்பாடுகளை பேராசிரியர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

