/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு
/
மார்கழி மாதத்தையொட்டி வாழைத்தார் விலை உயர்வு
ADDED : டிச 23, 2025 05:39 AM
ப.வேலுார்: ப.வேலுார் தாலுகா, பாண்டமங்கலம், பொத்-தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்-பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த-மங்கலம், சிறுநல்லிகோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயி-ரிட்டுள்ளனர்.
வாழைத்தார்களை, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு, 600 வாழைத்தார்களை வரத்தாகின. கடந்த வாரம், 250 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 350 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி ரகம், 400 ரூபாய்க்கும்; 5 ரூபாய்க்கு விற்ற மொந்தன் வாழை ஒன்று, 8 ரூபாயாக விற்பனை செய்யப்-பட்டன. மார்கழி மாதத்தையொட்டி, கோவில்-களில் விசேஷ பூஜை நடந்து வருவதால், வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்-யப்பட்டது.

