ADDED : டிச 23, 2025 05:40 AM

ராசிபுரம்: ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்-பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த சாலை உள்-கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் சிறப்பு பழுது பார்த்தல் திட்டம், 2025--26ன் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடந்து வந்தன.
இதில், மங்களபு-ரத்திலிருந்து வேப்பிலைப்பட்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல், ராசி-புரம் நகரத்தில் கோனேரிப்பட்டி பஸ் நிறுத்தம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை மற்றும் ராசி-புரம் நகராட்சி அலுவலகம் முதல் இந்திரா நகர் வரை சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன.மேலும், மல்லுார் பகுதியில் ஓடுதளத்தை மேம்படுத்துதல், குழிவளவு சாலை மற்றும் சீராப்பள்ளியிலிருந்து சிங்களாந்தபுரம் செல்லும் சாலையில் சிறப்பு பழுது பார்த்தல் ஆகிய பணி-களும் நிறைவடைந்துள்ளன.
இப்பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது சாலைகளின் தடிமன், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்து தரத்தை உறுதிப்படுத்தினார். ராசிபுரம் நெடுஞ்சாலை கட்-டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவி பொறியாளர் மவுனிகாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

