நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் இருந்து குருவிளாம்பட்டிக்குச் செல்லும் 2 கி.மீ., ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதை சீரமைக்க உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் நேற்று காலை 9:10 மணி முதல் 9:40 மணி வரை பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார், வருவாய்த்துறை அலு வலர்கள் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என சமரசம் செய்தனர்.