ADDED : செப் 13, 2025 04:32 AM
முதலிடம் பெற்ற மாணவி
சோழவந்தான்: விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி அட்சயா மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றார். மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மதுரை எம்.எல். டபிள்யூ.ஏ. பள்ளியில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழறிஞர் சாலமன் பாப்பையா பரிசு வழங்கினார். 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 'எல்லா உயிரும் இன்பம் எய்துக' எனும் தலைப்பில் பேசி முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓண ம் கொ ண்டாட்டம்
திருப்பரங்குன்றம்: சவுராஷ்ட்ரா கல்லுாரி முதுகலை கணினி பயன்பாடுகள் துறை சார்பில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு அத்தப் பூக்களம் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.14 அணிகளாக பங்கேற்றனர். சிறப்பாக அத்தப்பூ கோலம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீநிவாசன் ஒருங்கிணைத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரியும், கலைஞர் நுாற்றாண்டு நுாலகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். இதில் மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்தி போட்டி தேர்வு, தொழில்நுட்ப பயிற்சிகளில் பங்கு கொள்வது என முடிவானது. கல்லுாரி நிறுவனர் மாதவன், நுாலகர் கார்மேகம், நுாற்றாண்டு நுாலக தலைமை நுாலகர் தினேஷ்குமார், துணை தலைமை நுாலகர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோ கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் முதல்வர் முருகன், செயல் அலுவலர் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
கொலு பொம்மைகள் கண்காட்சி
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் உயராய்வு மையம், விளாச்சேரி கொலுபொம்மை உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கல்லுாரியில் கொலு பொம்மைகள்கண்காட்சி விற்பனை நடந்தது. தலைவர் விஜயராகவன் துவக்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார் சாமி, முதல்வர் ராம சுப்பையா குத்துவிளக்கு ஏற்றினார். வணிகவியல் உயர் ஆய்வு மைய தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். விளாச்சேரி பொம்மை உற்பத்தியாளர் ராமலிங்கம் பேசினார். பேராசிரியர்கள் ராதிகா, கோதை நாச்சியார், பேராசிரியர்கள் அற்புதராஜ், கீதா, தேவிகா, பாலசத்தியா, கஜப்பிரியா, சாய் மோகனா, பாண்டீஸ்வரி, செல்வமூர்த்தி கண்காட்சி ஏற்பாடுகள் செய்தனர்.
கட்டுரை போட்டிகள்
மதுரை: நான்காம் தமிழ்ச் சங்கம் துவக்க விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி செந்தமிழ்க் கல்லுாரியில் நடந்தது. முதல்வர்(பொறுப்பு) சாந்திதேவி வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கினார். உதவிப் பேராசிரியர்கள் செந்தில்குமார், நந்தினி, நேருஜி நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுப்புலட்சுமியும், உதவி பேராசிரியர் செல்வத்தரசியும் செய்திருந்தனர்.
ரத்ததான முகாம்
மதுரை: யாதவர் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி நிர்வாகமும், அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தின. பார்க் பிளாசா ஓட்டல் நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன் முகாமை துவக்கினார். கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜூ, ரத்தவங்கி துறைத் தலைவர் சிந்தா, ரத்ததானம் அவசியம் பற்றி பேசினர். பொருளாளர் கிருஷ்ணவேல், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் உடன் இருந்தனர். ஒருங்கிணைப்பு அலுவலர் ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அறிவியல் கருத்தரங்கு
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் 'வேதியியல் அறிவியலில் எல்லைகள்' குறித்த தேசிய அறிவியல் நடந்தது. முதல்வர் பால் ஜெயகர் துவக்கி வைத்தார். வேதியியல் ஆராய்ச்சித் துறைத் தலைவர் மோனிகா வரவேற்றார்.ஐ.சி.எம்.ஆர்-விக்டர் கட்டுப்பாட்டு ஆய்வு மைய மூலக்கூறு கண்டறிதல் துறை தலைவர் பரமசிவன் ராஜய்யா, ஐ.ஐ.டி., கான்பூர் உதவிப் பேராசிரியர்கள் பாஸ்கர் சுந்தரராஜூ, அப்பாராவ், ஸ்ரீனிவாஸ், பார்த்தசாரதி சுப்ரமணியன் ஆகியோர் உயிரியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட வினையூக்கம் மற்றும் உயிரி மூலக்கூறுகளை நிவர்த்தி செய்வதில் வேதியியலின் பங்கு பற்றி பேசினர். பசுமை வேதியியல், நானோ தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் பற்றிய தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன.பல்வேறு பல்கலை, கல்லுாரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்து விழிப்புணர்வு
மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வளாகத்தின் முன்பு 'வாகனங்கள் சீராக இயங்குதல்' என்ற கருத்தாக்கத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு நடந்தது. முதல்வர்(பொறுப்பு) ராஜேஸ்வர பழனிசாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி உடன் இருந்தனர். வேகக்கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்துதல், குறியீடுகளை பின்பற்றுதல் போன்றது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி சேவை அணி ஏற்பாடுகளை செய்தனர்.