ADDED : செப் 20, 2025 04:09 AM
மதுரை: தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், முழு அகவிலைப்படி வழங்கக் கோரி, 1968ல் ரயில்வே, பாதுகாப்பு, தபால் துறை ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்டச் செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ., கோட்டச் செயலாளர் ரபீக் பேசினார். 8வது ஊதியக் குழுவை விரைந்து அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
உதவிக் கோட்டச் செயலாளர் ராம்குமார், ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர், நிர்வாகிகள் சபரிவாசன், செந்தில், அருண்பிரசாத், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.