ADDED : செப் 20, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: எருமார்பட்டியில் பெருமாள் கோயில் பகுதியை சீரமைக்க கிராம மக்கள் டிராக்டர் மூலம் அருகில் உள்ள ஓடைகளில் மண்ணை அள்ளி சரிசெய்ய முற்பட்டனர்.
அனுமதி இல்லாமல் மணலை திருடுவதாக சிலர் வருவாய் துறைக்கு புகார் தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் வந்து டிராக்டரை பறிமுதல் செய்ய முற்பட்டதால், உசிலம்பட்டி - எழுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறையினர் சமரசம் செய்தனர்.