
பஸ்சில் மோதி பெண் பலி
சோழவந்தான்: தேனுாரைச் சேர்ந்தவர் கீர்த்திகா 24. தனியார் நிறுவன ஊழியர். கடந்த செப்.16ல் டூவீலரில் தேனுார் - மேலக்கால் ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. படுகாய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிகிச்சைக்கு வந்தவர் சில்மிஷம்
வாடிப்பட்டி: சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் சுமன்பாண்டி 29. சிறுநீரக பாதிப்புக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்காக அலங்காநல்லுார் பகுதி உறவினர் வீட்டில் தங்கினார். அப்பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதில் ஒரு சிறுமி தற்கொலைக்கு முயன்றார். ஆத்திரமுற்ற சிறுமியின் சகோதரன் ஆக.,16ல் சுமன்பாண்டியை கத்தியால் குத்தினார். சிகிச்சையில் உள்ள சுமன்பாண்டியை சமயநல்லுார் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கொலையில் மூவர் கைது
மேலுார்: தும்பைபட்டி ராமாயி 70. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாக்கியம் வீட்டிற்கும் கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்படவே செப்.16 ல் பாக்கியம் மற்றும் அவரது உறவினர்கள் மூவர் சேர்ந்து தாக்கினர். இதில் காயம்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமாயி நேற்று முன்தினம் இறந்தார். இவ்வழக்கில் பாக்கியம் 55, உறவினர்கள் மருதுபாண்டி 50, கவிதா 49, ஆகியோரை மேலுார் போலீசார் கைது செய்தனர்.
கொலையில் இருவர் கைது
மேலுார்: புதுசுக்காம்பட்டி ராம்பிரசாத் 34. செப்.16 இரவு மேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே இவரது டூவீலரும், வினோபாகாலனி சந்தானம் டூவீலரும் மோதின. சந்தானம் உட்பட மூவர் ராம்பிரசாத்தை தாக்கினர். காயம்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். மேலுார் - மதுரை ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தாசில்தார் செந்தாமரை, டி.எஸ்.பி., சிவக்குமார் சமரசம் செய்தனர். இவ் வழக்கில் சொக்கம்பட்டி விஜயபாரதி 20, முத்துமணியை 22, போலீசார் கைது செய்தனர்.