/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு பரிசு
/
சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு பரிசு
ADDED : செப் 12, 2025 05:00 AM
மதுரை: வேளாண் துறை சார்பில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
'இத்திட்டத்தின் கீழ் நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செயல்படுத்தும் விவசாயிக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2.5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்' என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
பதிவு கட்டணம் ரூ.150. விவசாய சாதனை குறித்த விளக்கம், தொழில்நுட்ப விவரங்கள், அதற்கான புகைப்படம், வீடியோக்களுடன் மாவட்ட அளவிலான குழுவிடம் விளக்க வேண்டும்.
சொந்த கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். இந்த கண்டுபிடிப்பு, தொழில்நுட்பத்திற்காக வேறு போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றிருக்கக் கூடாது.
இதற்கான குறிப்புரை வேளாண் பொறியியல் துறை மூலம் பெறப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பம் அனைத்து விவசாயிகளும் எளிதில் பின்பற்றுவதாக, செலவை குறைப்பாதாக இருக்க வேண்டும் என்றார்.