/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுகாதாரத்திற்கு ஏங்கும் சுப்பிரமணியபுரம் சமாளிக்கும் கவுன்சிலர் சாதனை புரிவாரா
/
சுகாதாரத்திற்கு ஏங்கும் சுப்பிரமணியபுரம் சமாளிக்கும் கவுன்சிலர் சாதனை புரிவாரா
சுகாதாரத்திற்கு ஏங்கும் சுப்பிரமணியபுரம் சமாளிக்கும் கவுன்சிலர் சாதனை புரிவாரா
சுகாதாரத்திற்கு ஏங்கும் சுப்பிரமணியபுரம் சமாளிக்கும் கவுன்சிலர் சாதனை புரிவாரா
ADDED : செப் 12, 2025 05:01 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 77வது வார்டு சுப்பிரமணிய புரத்தில் ரோடு அமைக்கும் பணிகள் சரிவர முடியாததால் மழைக்காலங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இந்த வார்டில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் குடிநீர் திட்டம் துவங்காததால் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் பயணிக்கும் சூழல் உள்ளது.
சமூகவிரோதிகள் அதிகம் சுண்ணாம்பு காளவாசல் பகுதி கர்ணன் கூறிய தாவது:
தெற்கு சண்முகபுரம், முனியாண்டி கோயில், காஜா தெரு பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவ தால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு உண்டாகிறது. எம்.கே.புரம் பகவதி அம்மன் கோயில் முன் குப்பை கொட்டுவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நுாலக வசதி இல்லாததால் மாணவர்கள் தொலைவில் உள்ள டி.பி.கே., ரோடு செல்கின்றனர். கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையடையாததால், குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர்.
சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சி.சி.டி.வி., கேமராக்களை உடைப்பதுடன், இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்கள் நடமாட பயப்படுகின்றனர்.
போலீசார் ரோந்து வந்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இருநுாறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் திரிவதால் பள்ளிக் குழந்தைகள் அச்சத்துடனே செல்கின்றனர். சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
தெருவிளக்கு இல்லை எம்.கே.புரம் திருப்பதி கூறியதாவது:
பத்தாண்டுகளாக ரோட்டை சீரமைக்காமல் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல தடுமாறுகின்றன. புகார்களுக்கு கவுன்சிலர் சமாளிக்கிறாரே தவிர, தீர்வு கிடைக்கவில்லை. சுப்பிரமணியபுரம் கம்பர் பள்ளி, மார்க்கெட் பகுதிகளில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. இருள் சூழ்ந்துள்ளளதால் திருட்டு அச்சம் உள்ளது.
பகவதி அம்மன் கோயில் பகுதியில் ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ரேஷன் கடையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
சுப்பிரமணியபுரம் காங்., கவுன்சிலர் ராஜ் பிரதாபன் கூறியதாவது:
சுப்பிரமணியபுரம் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம், நகர்புற நலவாழ்வு மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.54 கோடி மதிப்பில் 396 குடியிருப்பு கட்டும் பணி நிறைவு பெற உள்ளது.
எம்.கே.புரம், சுண்ணாம்பு காளவாசல் பகுதி யில் ரூ.1.25 கோடியில் தார் ரோடு பணி துவங்க உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எம்.கே.புரத்தில் ரேஷன் கடைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சுப்பிர மணியபுரத்தில் ரூ.1.99 கோடி மதிப்பில் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. வார்டு முழுவதும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் முழுமையடைய மேயர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளேன் என்றார்.