/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு 'லீட் பிளாட்டினம்' அந்தஸ்து
/
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு 'லீட் பிளாட்டினம்' அந்தஸ்து
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு 'லீட் பிளாட்டினம்' அந்தஸ்து
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு 'லீட் பிளாட்டினம்' அந்தஸ்து
ADDED : செப் 20, 2025 04:10 AM
மதுரை: சுற்றுச்சூழலுக்கு சாதகமான நேர்த்தியான செயல்பாடுகளுக்காக 'லீட் வி 4.0 பிளாட்டினம்' அந்தஸ்துக்கு மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தேர்வாகியுள்ளது.
மருத்துவமனை வடிவமைப்பு, நீர் சேமிப்பு, இயற்கையான வெளிச்சம், நல்ல காற்றோட்டம், மின்சக்தியின் பயன்பாட்டை குறைக்கும் செயல்பாடுகள் என முன்மாதிரியாக இம்மருத்துவமனை விளங்குகிறது. கிரீன் பிசினஸ் சர்டிபிகேஷன் இங்க் (ஜி.பி.சி.ஐ.,) நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு யு.எஸ். கிரீன் பில்டிங் கவுன்சில் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ் குருசங்கர் கூறுகையில்,''மருந்துகள் மற்றும் சிகிச்சை என்பதையும் கடந்த ஒரு மேலான அம்சம் தான் குணமாக்குதல். அதில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. ஒரு மருத்துவமனையானது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு தனது செயல்பாட்டை சுருக்கிக் கொள்ளாமல் நாம் வாழும் இந்த பூமியை பாதுகாப்பதிலும் பங்களிப்பை வழங்குவது அவசியம்'' என்றார்.