ADDED : செப் 11, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கிடையேயான பெண்கள் பிரிவு பூப்பந்து போட்டி ராஜ பாளையம் ராஜூஸ் கல்லுாரியில் நடந்தது. இதில் 9 கல்லுாரிகள் கலந்து கொண்டன.
முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 2 - 0 செட் கணக்கில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் ராஜூஸ் கல்லுாரி தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 2 - 0 செட் கணக்கில் ராஜூஸ் கல்லுாரியை வீழ்த்தியது.
தொடர்ந்து 16 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றியது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டினர்.