ADDED : செப் 11, 2025 06:06 AM

மதுரை: அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. மகளிர் பிரிவில் ஓ.சி.பி.எம்., பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்.
சூப்பர் லீக் மற்றும் லீக் முறைகளில் போட்டிகள் நடந்தன.
சூப்பர் லீக் போட்டியில் சேது பாஸ்கரா அணியை 35 -- 15, 35 -- 14 புள்ளிகளில் ஓ.சி.பி.எம்., அணி வீழ்த்தியது.
2வது போட்டியில் கிருஷ்ணகிரி டான்பாஸ்கோ அணியை 35 -- 22, 35 -- 29 புள்ளிகளில் வீழ்த்தி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் லீக் போட்டியில் பல்லாவரம் செயின்ட் தெரேசா அணியை 35 -- 29, 35 -- 27 புள்ளிகளில் வீழ்த்தியது.
இரண்டாவது லீக் போட்டியில் சேலம் இளம்பிள்ளை அரசுப்பள்ளி அணியை 35 -- 17, 35 -- 31 புள்ளிகளிலும் 3வது லீக் போட்டியில் சென்னை சி.எஸ்.ஐ., ஜெஸ்ஸி மோசஸ் அணியை 35 -- 30, 35 -- 17 புள்ளிகளில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர் ஓ.சி.பி.எம்., பள்ளி மாணவிகள்.
சிறந்த வீராங்கனையாக முத்துமீனா, நிகிதா தேர்வாகினர்.
பேராசிரியர் அன்புச்செழியன், உடற்கல்வி இயக்குநர் கணபதி பரிசு வழங்கினர்.
ஓ.சி.பி.எம். பள்ளித் தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சீஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணன், சர்மிளா வாழ்த்தினர்.