ADDED : செப் 11, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, முன்னாள் நகர் செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பூமிநாதன், கார்த்திகாராணி, சுசீந்திரன், அணி நிர்வாகிகள் வினோத், அரவிந்தன், சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மொத்த மனுக்கள் 702ல் 456 மனுக்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டன.