/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது
/
மதநல்லிணக்க நடைபயணம் செல்ல முயன்ற 50 பேர் கைது
ADDED : டிச 28, 2025 06:04 AM
திருநகர்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியிலிருந்து திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத நல்லிணக்க நடை பயணம் நேற்று நடக்க இருந்தது.
மாதர் சங்க மாவட்ட தலைவர் கவுன்சிலர் விஜயா தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஹார்விபட்டியில் நேற்று மாலை கூடினர்.
போலீசார் அவர்களிடம் அனுமதி இன்றி நடை பயணம் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. நடை பயணம் செல்ல முயன்ற மாதர் சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

