ADDED : டிச 28, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்.,(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) நடந்தது. வரைவு வாக்காளர் பட்டி
யல் டிச. 19 ல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி, தொகுதி மாற்றம் கோரி விண்ணப்பிக்க நேற்று அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம் துவங்கியது. 17 ஆயிரத்து 42 பேர் விண்ணப்பித்தனர். முகாம் இன்றும் (டிச.28) நடக்கிறது.

