ADDED : செப் 11, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் பசும்பொன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 6.00 மணி முதல் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று 10 பேரை கடித்தது.
இதில் வாசல் தெளித்து கொண்டிருந்த மூதாட்டி, வயலில் வேலை செய்த விவசாயி, வீட்டின் முன் பாத்திரம் துலக்கிய சிறுமி, பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன், சைக்கிள் துடைத்த வாலிபர் என பத்து பேரையும், ஆடு, மாடு, கோழி மற்றும் தெரு நாய்களையும் கடித்து குதறியது. படுகாயமடைந்த 10 பேரும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மேலும் வெறி நாய்களை பிடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கின்றனர்.