ADDED : செப் 11, 2025 05:36 AM
கோயில் சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, குபேர சாய்பாபாவிற்கு கூட்டுப்பாராயணத்துடன் அபிஷேகம், சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13 பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஹரே ராமா மகா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதியம் 12:30 மணி.
பள்ளி, கல்லுாரி அறிவியல் கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, கருத்துரை: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சங்கரலிங்கம், பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், துவக்கவுரை: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: நுண்ணுயிரியல் துறை, காலை 11:30 மணி.
சொற்பொழிவு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்புரை: டி.வி.எஸ்., பள்ளி ஆசிரியர் முரளிதரன், காலை 10:00 மணி.
பாரதியார் நினைவு தின சொற்பொழிவு: எந்நாளும் வாழும் மகா கவி - நிகழ்த்துபவர்: அழகப்பா பல்கலை பேராசிரியர் சுதா, தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கல்லுாரி தமிழ்த்துறை உயராய்வு மையம், காலை 11:30 மணி.
பாரதியார் நினைவு தின விழா: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, தலைமை: ஓய்வுபெற்ற போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், முன்னிலை: ஆடிட்டர் சேது மாதவா, முன்னிலை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், பாரதி யுகவேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, காலை 8:45 மணி.
தற்கொலை வார விழிப்புணர்வு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பால் ஜெயகர், ஏற்பாடு: கல்லுாரி உளவியல் துறை, காலை 10:00 மணி.
பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் திட்ட இயக்குநர் தமிழரசி, சிறப்புரை: லட்சுமண பெருமாள், மாலை 6:00 முதல் 9:00 மணி வரை, பள்ளி கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
பாரதியார் நினைவு தின நிகழ்ச்சி: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேல வெளி வீதி, மதுரை, தலைமை: உலக திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன், சிறப்புரை: பேராசிரியர் ராஜாராம், கருத்துரை: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பரிசளிப்பவர்: எம்.எல். டபிள்யூ.ஏ., பள்ளி தாளாளர் நாகசுப்பிர மணியன், மாலை 5:30 மணி.
மதுரை கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மண்டல அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகள்: ரேஸ் கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஜூடோ, மாணவர்களுக்கான பீச் வாலிபால், கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டை, மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், பொதுப்பிரிவினருக்கான சிலம்ப போட்டிகள், காலை 7:00 மணி.