/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 இளம்பெண்கள் உட்பட 5 பேர் மாயம்
/
3 இளம்பெண்கள் உட்பட 5 பேர் மாயம்
ADDED : டிச 15, 2025 07:22 AM
ஓசூர்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மின்-னக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி கார்த்திகா, 21. கடந்த, 8ம் தேதி காலை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே பாப்பாரப்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்தவர், அன்றைய தினமே திரும்பி சென்றார்.
ஆனால் அவர் நாமக்கல் செல்லாமல் மாய-மானார். அவரது தாய் தாயம்மாள், 62, புகார்படி, கல்லாவி போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த வெலகலஹள்ளியை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சண்முகப்பிரியா, 25. பெத்ததாலப்பள்ளி ஆனந்த் நகரில் தங்கியி-ருந்தார்; நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் விக்னேஷ் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேடி வரு-கின்றனர்.பர்கூர் தாலுகா, கொண்டப்பநாயக்கனப்பள்ளி அருகே மாஸ்திகானுாரை சேர்ந்தவர் நவீன்-குமார், 29. ஓசூர் அலசநத்தம் நரசிம்மா கால-னியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மேற்பார்-வையாளராக உள்ளார்.இவரது மனைவி மீனாட்சி, 29. இவர்களுக்கு, 5 வயதில் ஆண், 3 வயதில் பெண் குழந்தை உள்-ளது. குடும்ப பிரச்னையால் கடந்த, 11ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, தன் இரு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து சென்ற மீனாட்சி திரும்பி வர-வில்லை. கணவர் நவீன்குமார் புகார்படி, ஹட்கா போலீசார் தேடி வருகின்றனர்.

