ADDED : டிச 15, 2025 07:21 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஸ்ரீஸ்ரீஅக்ர-ஹாரம் வேதிக்குழுமம் மற்றும் ஓசூர் ஸ்ரீ ராம நாம சத்சங்கம் சார்பில், தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளையின் முன்னெடுப்பில், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில், ஸ்ரீ ராம நாம வங்கி துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு பிரா-மணர் சங்க ஓசூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வேதிக்-குழும நிறுவன தலைவர் கீர்த்திவாசன் அய்யர், பாரதி அய்யர் ஆகியோர், மகா கணபதி பூஜை நடத்தினர்.
தொடர்ந்து, உலக மக்கள் நலமுடன் வாழ, மகா மிருத்யுஞ்சய ஹோமம், ருத்ர பாராயணம் நடந்-தது. ராம நாமத்தை எழுதுவதற்காக பிரத்யேக புத்தகம் வெளியிடப்பட்டு, அது வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த புத்தகத்தில் ராம நாமத்தை பக்தர்கள் எழுதி திரும்ப வழங்கினால், அவற்றை எடுத்து சென்று அடுத்த ஆண்டு ஜன., 26ம் தேதி, அயோத்தியில் நடக்கும் பால ராமர் கோவில் ராமர் பட்டாபி-ஷேக வைபவத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.
பக்தர்கள் எழுதிய ராம நாம புத்தகம் அனைத்-தையும், ராம நாம வங்கி என்ற பெயரில் அயோத்-தியில் நிறுவப்பட உள்ள ராம ஸ்துாபிக்கு அடியில் வைக்கப்படும் என, கீர்த்திவாசன் அய்யர் தெரிவித்தார். பக்தர்களுக்கு ராம நாமம் எழுதும் புத்தகம் வழங்கப்பட்டது. காஞ்சி மகா பெரியவர் புகைப்படம் அச்சிடப்பட்ட அடுத்த ஆண்டிற்கான தினசரி காலண்டர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

