/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிராகன் பழத்துக்கு சாகுபடி மானியம் பெற விண்-ணப்பிக்கலாம்
/
டிராகன் பழத்துக்கு சாகுபடி மானியம் பெற விண்-ணப்பிக்கலாம்
டிராகன் பழத்துக்கு சாகுபடி மானியம் பெற விண்-ணப்பிக்கலாம்
டிராகன் பழத்துக்கு சாகுபடி மானியம் பெற விண்-ணப்பிக்கலாம்
ADDED : டிச 19, 2025 05:55 AM
கரூர்: டிராகன் பழத்துக்கு சாகுபடி மானியம் பெற விண்-ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் ஹெக்டர் பரப்ப-ளவில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. டிராகன் பழம் சமீபத்தில் விவசாயிகளின் கவ-னத்தை ஈர்த்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கற்றாழை வகையை சார்ந்தது. பல ஊட்டச்சத்து நிறைந்த டிராகன் பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. டிராகன் பழம் நடவு செய்த முதல் ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் ஆயுட்காலம், 20 ஆண்டுகள்.
நடவு செய்த, 2 ஆண்டுக்கு பிறகு சராசரி பொரு-ளாதார மகசூல் ஏக்கருக்கு, 10 டன் வரை கிடைக்கும். தற்போது சந்தையில் ஒரு கிலோ பழம், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தோட்-டக்கலை துறை மூலம் அரவக்குறிச்சி, க.பர-மத்தி, கடவூர், குளித்தலை மற்றும் தோகை-மலை வட்டாரங்களில் டிராகன் பழம் பயிரிடப்-பட்டு வருகிறது. பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம், டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு, 1.62 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ இணைய தளத்தில் காணலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

