/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 19, 2025 05:55 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லுா-ரியில் மனநலம் மற்றும் மாதவிடாய் கால துாய்மை முறை குறித்து மாணவ, மாணவிய-ருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கருத்துரையாளர்களாக பங்கேற்ற, பாலின வள மையத்தின் கமலம் மற்றும் போதும்பொண்ணு சிவகாமி ஆகியோர்,' மனநலத்தின் முக்கியத்-துவம், உடல் நலம் மற்றும் மனநலத்திற்கு இடையேயான வேறுபாடு, மனநலம் பாதிக்கப்-படும் சூழ்நிலை, அதற்கான தீர்வு, தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது, தற்-கொலை எண்ணங்கள் தோன்றும் போது உடனடி-யாக உதவி பெற வேண்டிய தொடர்பு எண்களிடம் ஆலோசனை பெற வேண்டும்' என்று வலியுறுத்-தினர். அத்துடன், மாதவிடாய் காலங்களில் பின்-பற்ற வேண்டிய துாய்மை முறைகள், உடல் நலம் மற்றும் மனநல பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்-கப்பட்டது.முன்னதாக கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார். மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.

