/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ரிங்ரோடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்
/
கரூரில் ரிங்ரோடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்
ADDED : டிச 19, 2025 06:06 AM
கரூர்: கரூர் அருகே ஆத்துாரில், குட்டைக்கடை முதல் செம்மடை வரை ரிங் ரோடு (சுற்றுவட்டச்சாலை) அமைக்கும் பணிக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., (நிலம் கையகப்படுத்தல்) ராஜலட்சுமி தலைமை வகித்தார். புன்னம், ஆத்துார், மண்மங்-கலம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். ரிங் ரோட்டால் வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வக்கீல் கரிகாலன் (அ.தி.மு.க., நிர்வாகி) நிருபர்க-ளிடம் கூறியதாவது:
கடந்த டிச., 16ல் ரிங் ரோடுக்காக நிலங்களை கையகப்படுத்த, அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. ஆனால், பல மாதங்க-ளுக்கு முன்பே கையகப்படுத்திய இடத்தில் அத்-துமீறி நுழைந்தது மட்டுமின்றி, அளவீடு செய்து கற்களை நட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆதாரங்களுடன் கொடுத்து கேள்வி கேட்டால், அதிகாரிகளிடம் பதில் இல்லை. 2013 மற்றும் 2019ம் ஆண்டு ரிங்ரோடு வரைபடங்களை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்துள்-ளது. 2021ல் புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கி, அதன்படி நிலம் கையகப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல், 2013 வரைபடம் படி நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று சொல்லியும், அதற்கு பதில் இல்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரிங் ரோடு அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

