/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2025 06:06 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் மணி தலைமை வகித்தார். மாவட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசார-ணைகள், அரசு நிர்ணயத்துள்ள கால வரைய-றைக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப, ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணையிட வேண்டும். காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலா-ளர்களுக்கு, கடைசியாக பெற்ற ஊதியத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதியமாக அனுமதித்து ஆணையிட வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.