/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை
/
சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை
சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை
சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலைக்கு பெயர் பலகை தேவை
ADDED : டிச 19, 2025 05:57 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயரம் தாலுகா, கல்லுக்கடை பாலம் சாலை அருகில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.
நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் இதர பதிவு சம்பந்தபட்ட பணிகள் அனைத்தும், கிருஷ்ணராயபுரம் சார்பதி-வாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட பதிவுகள் நடக்கிறது. இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகம் செல்-வதற்கான சாலை என்பது குறித்து, தகவல் பலகை இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், பத்திரப்பதிவு அலுவலகம் செல்வதற்கு வழி தெரியாமல் தாலுகா அலுவலகம் செல்கின்றனர். எனவே, மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கல்லுக்கடை பாலம் அருகில், பத்திரபதிவு அலுவலகம் செல்லும் வழியை, தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.