/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழியான வையாவூர் சாலை
/
போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழியான வையாவூர் சாலை
போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழியான வையாவூர் சாலை
போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழியான வையாவூர் சாலை
ADDED : செப் 11, 2025 02:59 AM

வையாவூர்:போக்குவரத்திற்கு லாயக்கற்று, பல்லாங்குழியான வையாவூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து, வையாவூர் உயர்நிலைப் பள்ளி வழியாக, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சுற்றுவட்டார கிராம மக்கள் களியனுார், நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய கிராமங்களின் வழியாக வாலாஜாபாத் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இதில், 800 மீட்டர் துார சாலை சேதம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது, பல்லாங்குழி சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது. கடந்த மாதம், இந்த பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.
எனவே, சேதமடைந்த சாலை பள்ளங்களை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.