/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 11, 2025 02:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரி கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள பொன்னேரி ஏரி, அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.
பின், விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாறியதால் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஏரி முழுமையாக நிரம்பினால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியிருப்புகளை மழைநீர் சூழ்கிறது.
எனவே, பொன்னேரி ஏரியில் இருந்து கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.