/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சொக்கம்மன் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
/
சொக்கம்மன் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
ADDED : செப் 11, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:-உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில் உள்ள சொக்கம்மன் கோவிலில் ஆவணி மாத தேர்த் திருவிழா விமரிசையாக நடந்தது.
முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
இந்த திருவிழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்று சென்றனர்.