/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை ஐ.ஐ.டி.,யுடன் சங்கரா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
சென்னை ஐ.ஐ.டி.,யுடன் சங்கரா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை ஐ.ஐ.டி.,யுடன் சங்கரா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை ஐ.ஐ.டி.,யுடன் சங்கரா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 11, 2025 03:00 AM

காஞ்சிபுரம்:மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்காக, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது.
சென்னை ஐ.ஐ.டி., உடன் காஞ்சிபுரம் சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை, தன் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவதற்காக 'ஸ்வயம் பிளஸ்' தளத்தின் கீழ் ஒத்துழைக்க, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
'ஸ்வயம் ப்ளஸ்' என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் ஒரு தேசிய கல்வி முன் முயற்சியாகும்.
அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வியாளர்களை மேம்படுத்தும் நோக்கில், 'ஸ்வயம் ப்ளஸ்' கல்வியாளர்களுக்கான 'ஏஐ' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் 'ஏஐ' மூலம் கற்பித்தல் கற்றல் மற்றும் ஆராய்ச்சியில் செயல் திறனை மேம்படுத்துவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது டிஜிட்டல் கல்வி அறிவு மறறும் கல்வி சமூகத்தினர் இடையே எதிர்கால தேவைக்கான திறன்களை வளர்ப்பதற்காக ஒரு முன்னேற்ற படியாகும்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் பேராசிரியர் காமகோடி மற்றும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை சார்பு துணை வேந்தர் பேராசிரியர் வசந்தகுமார் மேத்தா ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின்போது, சங்கரா பல்கலை கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜெயபிரியா உடனிருந்தார்.