/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்ணவாக்கத்தில் 1,013 மனுக்கள் ஏற்பு
/
குண்ணவாக்கத்தில் 1,013 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 11, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:-குண்ணவாக்கத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,013 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
அதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில், மொத்தம் 1,013 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 56 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
இதில், உத்திரமேரூர் ஒன்றிய துணை சேர்மன் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.