/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய கைவினை பொருட்கள் வார விழா
/
தேசிய கைவினை பொருட்கள் வார விழா
ADDED : டிச 15, 2025 05:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தேசிய கைவினை பொருட்கள் வார விழாவினை கலெக்டர் து வக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மரசிற்பக் கைவினைக் கலைஞர்கள் சார்பில் தேசிய கைவினை பொருட்கள் வார விழா நடந்தது. அண்ணா நகர் விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பின்னர், மர சிற்ப கைவினை பொருட்கள் மற்றும் மர சிற்ப கைவினை கலைஞர்களின் நேரடி மரசிற்ப செய்முறை களை பார்வையிட்டு மரச்சிற்பங்களின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து புதிய தொழில் நுட்ப கணினி மூலம் மரச்சிற்பங்கள் செய்ய அரசு மானியத்துடன் கூடிய இயந்திரங்கள் வாங்க கடன் வசதி செய்து தர தயாராக இருப்பதாகவும், இணையதள வர்த்தகம் மூலம் உற்பத்தி செய்யும் மரச்சிற்பங்களை விற்பனை செய்வது போன்ற வசதிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மரச்சிற்ப கைவினை கலைஞர்கள் குழுக்களாக சேர்ந்து பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது.
இதில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சந்திரசேகரன், மரச்சிற்பம் தயாரிப்போர் கைவினை தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் மற்றும் விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

