ADDED : டிச 15, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ஐயப்ப சுவாமிக்கு குருபூஜை விழா நடந்தது.
தர்மசாஸ்தா அன்னதான சேவா சமிதி தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். குருபூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் படி பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி ஆறுமுகம் செய்திருந்தார்.

