/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் ரத்த தானம்
/
மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் ரத்த தானம்
ADDED : டிச 15, 2025 05:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் 10வது ஆண்டு ரத்த தான முகாம் நேற்று நடந்தது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாரதி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் மயில்வாகணன், கணேசன், மருத்துவ வங்கி அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி பணியின் போது 3 பொறுப்பாளர்கள் உயிரிழந்த னர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிச., 12ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்க கள்ளக்குறிச்சி கிளை சார்பில் ரத்த தானம் செய்யப்படுகிறது. அதன்படி, 10வது ஆண்டாக நேற்று நடந்த முகாமில் 16 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டன. அப்போது, மின்வாரிய பொறியாளர்கள் எழிலரசன், முஸ்தபா, கிருபாகரன், அழகன், பாண்டுரங்கன், கேசவன், பிரசன்னா, சந்திரபிரகாசம், ஓய்வு பெற்ற பொறியாளர்கள் ரங்கசாமி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

