
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டட பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறை மூலம் 8 தளங்கள் கொண்ட கலெக்டர் அலுவலகம் புதிததாக கட்டப்படுகிறது. பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. இம்மாதம் இறுதியில் கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா நடக்கவுள்ளது. இதனையொட்டி, இறுதிகட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

