/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' யில் கொட்டித் தீர்த்த கனமழை
/
' கொடை' யில் கொட்டித் தீர்த்த கனமழை
ADDED : செப் 11, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் ,தாண்டிக்குடி மலைப் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்துவெயிலின் தாக்கம் அதிகரிக்க பாசன வசதியின்றி மக்கள் அவதியடைந்தனர். நேற்று முன்தினம் இரவு 7: 00 மணிக்கு துவங்கிய மழை மறுநாள் காலை வரை நீடித்தது.இதனால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி,புலிச்சோலை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மழையால் குளு குளு நகரம் மேலும் குளிர்ந்தது. அதிகபட்சமாக பிரையன்ட் பூங்காவில் 61. மி. மீ., மழை பதிவானது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.