/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெடுஞ்சாலையில் குதிரைகள் பொதுமக்கள் அச்சம்
/
நெடுஞ்சாலையில் குதிரைகள் பொதுமக்கள் அச்சம்
ADDED : டிச 19, 2025 06:37 AM

திட்டக்குடி: கூடலுார் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.
திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் கூடலுார், கூ.குடிக்காடு கைகாட்டி பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட குதிரைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன. திடீரென குதிரைகள் சண்டையிட்டு சாலையில் மிரண்டு ஓடுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், சாலையோர விளை நிலங்களில் உள்ள நெற்பயிரை சேதப்படுத்துகின்றன.
தொடர்ந்து, வாகன ஓட்டிகளையும், பொது மக்களையும் அச்சுறுத்தி வரும் குதிரைகளைப் பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

