ADDED : டிச 19, 2025 06:37 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த குமாரப்பேட்டை மீனவ கிராமத்தில், சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 6 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை மற்றும் ரூ.13 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட, ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கி னார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.
கிராம தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். பயணியர் நிழற்குடை மற்றும் ரேஷன் கடையை, பாண் டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி அருள்மணி, கிளை செயலாளர் சம்பத், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

