/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
ADDED : செப் 20, 2025 11:58 PM
சாரதா சரந்நவராத்திரி ரேஸ்கோர்ஸில் உள்ள சாரதாலயத்தில், ஸ்ரீ சாரதா சரந்நவராத்திரி இன்று நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு, சாரதாம்பாளுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. இதைதொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நவராத்திரி உற்சவ விழா தடாகம் ரோடு, அகர்வால் பள்ளி ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று அம்மன் தட்சிணா காளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சத்ய சாய் கோடி அர்ச்சனை சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாய் கோடி நாம அர்ச்சனை நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு பாராயணமும், மாலை 5:30க்கு சாய்பஜன் சத்சங்கமும் நடக்கிறது.
அறிவியல் ஆன்மிக சொற்பொழிவு மலுமிச்சம்பட்டியில் உள்ள ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், சுவாமி சங்கரானந்தா சொற்பொழிவாற்றுகிறார்.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
நமது தேசம் புண்ணிய தேசம் சூலுார் முத்துக்கவுண்டன் புதுாரில் செயல்பட்டு வரும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தப்படுகிறது. 44வது மாத நிகழ்ச்சி இன்று சூலுார், முத்துக்கவுண்டன்புதுார் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கில், மாலை 6 முதல் இரவு 8 மணி வரை, 'நமது தேசம் புண்ணிய தேசம்' என்ற தலைப்பில் நடக்கிறது. ஞான சஞ்சீவனம் குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீசசிகுமார் சொற்பொழிவாற்றுகிறார்.
ஹார்ட்டத்தான் ரோட்டரி கிளப், மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன், எஸ்பிடி மருத்துவமனை சார்பில், இருதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடக்கிறது. காலை 6.30 மணிக்கு ராம்நகர் எஸ்பிடி மருத்துவமனை முன் துவங்கும் இந்த ஓட்டம், நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைகிறது.
சீனியர் வாலிபால் போட்டி சீனியர் பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் 'ஆரோக்கியம், போதை ஒ ழிப்பு' விழிப்புணர்வு வாலிபால் போட்டி நடக்கிறது. பாலக்காடு ரோடு, குனியமுத்துார், வஹாப் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள, பாரதி நகரில் காலை 6.45 மணிக்கு போட்டி நடக்கிறது. நுழைவு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மகாளய அமாவாசை
வழிபாடு
l பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை. காலை 7 மணி முதல். l கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம். மதியம் 12 மணி. l ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர். காலை 9 மணி. l மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி. காலை 9 மணி. l மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர் பாளையம், குனியமுத்துார். மதியம் 11 மணி. l மாரியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம். மதியம் 12 மணி. l முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம். காலை 9 மணி. l மாரியம்மன் கோவில், வெள்ளலுார். காலை, 9 மணி.