/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு எருமை பள்ளத்தில் பனை மர நாற்றுகள் நடவு
/
ஏழு எருமை பள்ளத்தில் பனை மர நாற்றுகள் நடவு
ADDED : செப் 20, 2025 11:58 PM
மேட்டுப்பாளைய : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, ஏழு எருமை பள்ளம் துவங்குகிறது. இப்பள்ளம் வீரபாண்டி பேரூராட்சி, பிளிச்சி ஊராட்சி வழியாக, காரமடை ஒன்றிய ஊராட்சிகளான சிக்காரம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை கடந்து, சிறுமுகை அருகே பவானி ஆற்றுக்குச் செல்கிறது.
இந்த பள்ளத்தில், தண்ணீரை தேக்கி வைக்கும் விதமாக, அண்மையில் ரூ.1 கோடியில் 10 அடி உயரமுள்ள தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், அப்பகுதி கிணறுகளுக்கு நீரோட்டம் கிடைத்தது.
தடுப்பணையின் கரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று, தடுப்பணை சுற்றியுள்ள பகுதிகளில் பனை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. முன்னதாக, பட்டாசு வெடித்து ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பூபதி, ஞானசேகரன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ், கோவை மாவட்ட ரோட்டரி சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.