/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் 35வது பட்டமளிப்பு விழா
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் 35வது பட்டமளிப்பு விழா
ADDED : செப் 20, 2025 11:56 PM

கோவை : நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், 35வது பட்டமளிப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார்.
எல் அண்டு டி டெக்னாலஜிஸ் நிறுவனம் குளோபல் இன்ஜினியரிங் அகாடமி சர்வதேச தலைவர் கொட்டூர், பட்டம் வழங்கி பேசியதாவது:
கல்வி என்பது எதிர்காலத்தின் நுழைவாயில். அனைவருக்கும் அதிகாரத்தை பெற்றுத்தருகிறது. நம் பண்பாடு, கலாசாரத்தை கல்வி போதிக்கிறது.
அதனால்தான் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறோம். புதிய இந்தியாவில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன; தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கல்லுாரியில் 1,688 இளநிலை, 408 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த, 2,096 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரி செயலர் சிவக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.