/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரா மேட் இண்டியா-25' கண்காட்சி துவங்கியது
/
'ரா மேட் இண்டியா-25' கண்காட்சி துவங்கியது
ADDED : செப் 11, 2025 09:55 PM

கோவை; 'கொடிசியா' சார்பில், கோவை-அவிநாசி ரோட்டில் உள்ள 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், சர்வதேச மூலப் பொருட்கள் கண்காட்சி, 'ரா மேட் இண்டியா 2025' நேற்று துவங்கியது. காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, நாளை நிறைவு பெறுகிறது.
'ரா மேட் இண்டியா' கண்காட்சி தலைவர் சரவணகுமார், 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், 'கொடிசியா சார்பில் மூலப்பொருட்கள் குறித்த கண்காட்சி, நான்காவது பதிப்பாக நடக்கிறது. 'சிட்பி' வங்கி நிதியுதவியுடன் நடக்கும் இக்கண்காட்சியில் 76 நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அலுமினியம், இரும்பு, ஸ்டீல், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள், அவற்றின் தன்மை, உலோகங்களுக்கு பயன்படும் ரசாயனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான பிற மூலப்பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயனுள்ள கண்காட்சியாக இது அமையும்' என்றனர்.
'ரா மேட்' கண்காட்சியை, எஸ்.என்.டி., குரூப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துவக்கி வைத்தார். 'கொடிசியா' உறுப்பினர்கள் பங்கேற்றனர்.