/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிமைத்தொகை கேட்டு மனுவுடன் குவிந்த பெண்கள்
/
உரிமைத்தொகை கேட்டு மனுவுடன் குவிந்த பெண்கள்
ADDED : செப் 11, 2025 09:55 PM

சூலுார்; சூலுார் ஒன்றியத்துக்குட்பட்ட முத்துக்கவுண்டன் புதூர், ராசிபாளையம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முகாம் நடந்தது. இரு ஊராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மனுக்களுடன் குவிந்தனர்.
வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்காக குறைந்த மனுக்களே வந்தன. ஆனால், மகளிர் உரிமைத்தொகை கேட்டு மட்டும், ஆயிரக்கணக்கானோர் மனுக்களுடன் திரண்டனர்.
பெண்கள் குவிந்ததும் அலுவலர்கள் திணறி போயினர். மனுக்களை சரிபார்த்து வரிசைப்படுத்துதற்குள் அலுவலர்கள் ஒரு வழியாகி விட்டனர்.
விண்ணப்பித்த பெண்கள் கூறுகையில்,' ஊரில் ஏராளமானோர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். ஏற்கனவே விண்ணப்பித்தும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அனைவருக்கும் தொகை வழங்கப்படும், என, கூறியதால், விண்ணப்பிக்க வந்தோம். ஆனால், இங்கு வந்து பார்த்தால் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை பார்த்தால் உரிமைத் தொகை கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. நீண்ட நேரம் நின்று விண்ணப்பித்துள்ளோம். என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இவ்வாறு, அவர்கள் கூறினர்.