/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழனி ஆண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா
/
பழனி ஆண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா
ADDED : செப் 11, 2025 09:57 PM
அன்னுார்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் விளக்குத்தூண் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
சாலையூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான, பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் புதிதாக 20 அடி உயரத்திற்கு விளக்குத்தூண் நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.
காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அவிநாசி சித்தர் பீடம் சின்னச்சாமி சுவாமிகள் ஆகியோர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கின்றனர்.
புலவர் அனந்த கிருஷ்ணன் சொற்பொழிவாற்றுகிறார். விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் வார வழிபாட்டு அறக்கட்டளை குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.