/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை
ADDED : டிச 31, 2025 05:17 AM
பெ.நா.பாளையம்: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை ஜன., 4ம் தேதி நடக்கிறது.
காலை, 7:00 மணிக்கு சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் கொடியேற்றுகிறார். கலை, கல்வி பொருட்காட்சியை கவுமார மடாலய சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர அடிகளார் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் ராமகிருஷ்ண மிஷன் செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை வைக்கிறார்.
விழாவில், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொள்கிறார். காலை, 11:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
மதியம் அன்னதானம், தொடர்ந்து குருபூஜை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், வித்யாலயா நிறுவனங்களின் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, மதியம் 1:40 மணிக்கு வித்யாலய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியும், மதியம், 3:40 மணிக்கு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறித்து சுவாமி யதாத்மானந்தர் பேசுகிறார்.
தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் குறித்து சுவாமி நிர்மலேஷானந்தர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் பேசுகின்றனர்.
மாலை, 5:40 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் செய்து வருகிறார்.

